ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

0
65

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை காட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின.

அதன் பிறகு, தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் மீண்டும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து டெல்டா வகை கொரோனாவின் பாதிப்பு குறைந்ததையடுத்து, பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் பரவும் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி பாதிப்பு குறைந்ததையடுத்து, ஒவ்வொரு நாடாக ஊரடங்கை விலக்கிக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில், உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் ஊரடங்கை தளர்த்துவதில் கவனமுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் கூறுகையில்,

உலக நாடுகளில் சில நாடுகள் வைரஸ் தாக்கம் முழுமையாக நீங்கிவிட்டதாக நினைத்து, ஊரடங்கு கட்டுபாடுகளை முழுமையாக நீக்கி விடுகின்றன. அதன்பின், வைரஸ் தாகம் அதிகரிக்க தொடங்குகிறது. இதையடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துகின்றன.

இதற்கு மாறாக சில நாடுகள் வைரஸ் தாக்கத்தின் அளவை பொறுத்து படிப்படியாகவே ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்தி வருகின்றன. இவ்வாறு ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்துவதே சிறந்தது என அவர்கள் கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K