தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
61

கடந்த 2019ஆம் வருடம் முதல் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது, நோய் தொற்று பரவல் முதலில் சீனாவில் தோன்றியது. அதன் பிறகு இந்த நோய் தொற்று 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்சமயம் இந்த நோய் தொற்று பரவல் பல உலக நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.

ஆனால் 2 வருடங்களுக்குப் பிறகு மெல்ல, மெல்ல, இந்த நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கிய சூழ்நிலையில், மறுபடியும் இந்த நோய்த் தொற்று பரவல் அதிகரித்திருப்பது எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அதேபோன்று கடந்த 1ஆம் தேதி முதல் சீனாவிலுள்ள மேற்கு மாகாணங்களில் நோய் தொற்று பரவ அதிகரித்து வருகிறது. அதாவது மறுபடியும் ஒமைக்ரான் பரவல் பரவத் தொடங்கியிருப்பதால் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு சூழ்நிலையில், சீனாவின் அண்டை நாடாக விளங்கி வரும் இந்தியவிலும் பல்வேறு மாநிலங்களில் தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. அரியானா, புதுடில்லி, உள்ளிட்ட வட மாநிலங்களில் நோய்கள் அதிகரித்து வருகிறது.

அதேபோல தமிழகத்திலும் நோய்த்தொற்று நன்றாக குறைந்து வந்த சூழ்நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நோய்கள் அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடி மாணவர்களின் 60 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் முகக்கவசம் மறுபடியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாத அவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சியின் மூலமாக ஆலோசனை நடத்தவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவே தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்று கொள்ளவிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்படவிருக்கிறது.

அதாவது முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டியவர்கள் என்று தனித்தனியாக கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த திட்டமிட அரசு திட்டமிட்டிருக்கிறது.

அதோடு மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு, போன்றவற்றை உறுதி செய்வது தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவிருக்கிறது. அதே சமயம் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும், விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.