தினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க!

0
105

தினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க! 

இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் கிராம்பு என்பது ஒருவகை இந்திய மசாலா பொருள். இது ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதன் ஊட்டச்சத்து அளவையும் அதிகரிக்கிறது. இது சைஜியம் அரோமெட்டிக்கம் என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது தவிர கிராம்பானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதன் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

*. கிராம்பை தவறாமல் பயன்படுத்தும் போது அது வயிற்று வியாதிகளில் இருந்தும் பல் மற்றும் தொண்டை வழியில் இருந்தும் நிவாரணம் அளிக்க உதவும்.

*. கிராம்பில் உள்ள யுஜெனோல்  என்ற பொருள்தான் மன அழுத்தம் மற்றும் வயிற்று வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது.

*. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் டோபமைன் என்ற ஹார்மோன் குறைவதால் ஏற்படும் பாதிப்பு தான் பார்க்கின்சன். நரம்பு மண்டலத்தின் மிக முக்கிய பாதிப்பான இது தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்து பகுதியில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்து விடும். பொதுவாக இந்த நோய் வயதானவர்கள் இடையே காணப்படும்.  நீங்கள் அன்றாட ம் கிராம்பு எடுத்துக் கொண்டால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

*. கிராம்பில் வைட்டமின் ஏ, சி, ஃபோலேட், ரிபோபிளேவின், வைட்டமின்ஈ, தையாமின், வைட்டமின் டி, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், போன்றவை நிறைந்துள்ளன.

*. கிராம்பு வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது, இது பல்வலியை நீக்கும். கூடுதலாக, கிராம்பு எண்ணெய் பல் மற்றும் தலைவலியைக் குறைக்கவும் உதவுகிறது. கிராம்பு எண்ணெய்யை பற்களில் தடவுவதன் மூலமும் கிராம்பு மற்றும் அதன் எண்ணெயைப் பருகுவதன் மூலமும் நிவாரணம் பெறலாம்.

*. இந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகையை உணவில் சேர்க்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இந்த ஒரு வழிமுறையை கடைப்பிடித்தால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளோ ஏராளம். அவை என்ன என்பதை பார்ப்போம்.

*.  படுக்கைக்கு செல்லும் முன்பு இரண்டு கிராம்பை மென்று தின்று ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான சுடுநீர் குடித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி பல நன்மைகளை அளிக்கிறது.

கிராம்பை உணவுப் பொருட்களிலும் சேர்த்து வர நமக்கு எண்ணிலடங்கா மருத்துவ பலன்கள் கிடைத்து நாம் மறந்து மாத்திரைக்கு விடுதலை அளிக்கலாம்.