ஈசியான காலை உணவு ரெசிபி வேணுமா? அப்போ இதை படியுங்கள்..!

0
106

காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் நாள் முழுவதுக்குமான சக்தியை தருகிறது. ஈசியாகவும் அதே நேரத்தில் சத்தான காலை உணவு ரெசிபி உங்களுக்காக.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1 கப் பாசிப் பருப்பு – அரை கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 வெந்தயக்கீரை – 1 கட்டு இஞ்சி – 1 துண்டு கறிவேப்பிலை – சிறிது நெய் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – அரை தேக்கரண்டி உப்பு-தேவைக்கு ஏற்ப

தாளிக்க:

மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பட்டை – துண்டு லவங்கம் – 2 ஏலக்காய் – 1 நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை :

கீரையை நன்றாக பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். அரிசியையும் பருப்பையும் ஊறவைத்து கொள்ளுங்கள். அடுப்பில் பாத்திரத்தை வைத்து கொதித்ததும் அதில் அரிசி சேர்த்து வேகவிடவும் பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து நெய்யை அது காய்ந்ததும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்ததும் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். அதனுடன் வெந்தய கீரையை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்து, அதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து கொள்ளவும். அது வெந்ததும் அரிசி வெந்ததும் அதில் சேர்த்து தேவையான அளவு நெய் கலந்து கொள்ளவும்.