DMK Plan for Chennai Constituency-News4 Tamil Online Tamil News Channel
DMK Plan for Chennai Constituency-News4 Tamil Online Tamil News Channel

சற்றும் எதிர்பார்க்காத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிர்ச்சி

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வோம் தமிழகத்திற்கு என்ன செய்வோம் என பெரும்பாலும் நேர்மறையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எதிர் தரப்பில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று என்ன செய்ய போகிறோம் என்று கூறாமல் தொடர்ந்து ஆளும் கட்சியையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தரக்குறைவாக விமர்சனம் செய்வதையே முதன்மையாக செய்து வருகின்றனர்.அதிலும் திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தமிழக முதல்வர் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றோரை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் ஸ்டாலின் வைத்திருந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 
நீலகிரி மக்களவை தொகுதிக்கான அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது அவர் அந்த கூட்டத்தில் பேசுகையில் தான் அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியை 2 ஆண்டுகளாக ஸ்டாலின் வீட்டு சிறையில் வைத்திருந்தார். கருணாநிதியை வீட்டில் அடைத்து வைத்து விட்டு திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். 
அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக பேசி இருப்பார் என அவர்களின் கட்சியினரே கூறுகிறார்கள். இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கொடநாடு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசுகிறார். கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக இனி ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நீலகிரி தொகுதிக்கு இதுவரை திமுகவின் ஆ.ராசா எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நீலகிரி மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா தான் எனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வந்த நிலையில், கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளது திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.