இ-பாஸ் ரத்து..!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

0
91

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களுக்கிடையேயான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தியது. பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில்கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது.

அக்டோபர் 31ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் 30ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொது முடக்க தளர்வு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாவட்டங்களுக்கு இடையேயான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களுக்கிடையேயான இ-பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே மத்திய அரசை ஆலோசிக்காமல் மாநில அரசு எந்த வித கட்டுப்பாடும் விதிகக்கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K