திமுகவை பழிக்குப்பழி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

0
57

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திறப்பு விழா விற்கு திமுக சார்பாக யாரும் பங்கேற்கவில்லை. ஆகவே கருணாநிதி அவர்களுடைய படத் திறப்பு விழாவை புறக்கணிக்கிறார் என்று அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் படத்திறப்பு விழா விற்கு எங்களுக்கு அழைப்பிதழை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும் நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை இந்த விழாவை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு சமயத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்னை அழைத்து எதிர்க்கட்சிகள் உடைய தோழமையுடனும், அவர்களின் ஒத்துழைப்புடனும், விழா நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார்.ஆகவே என்னை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொடர்பு கொண்டு அவரிடம் இந்த விழாவில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்று சொல்வது மட்டும் அல்லாமல் குடியரசுத் தலைவர் ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்ட அமர்ந்திருக்கும் அந்த வரிசையில் அவருக்கும் ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தார் எனவும், கூறியிருக்கின்றார்.

அதோடு மட்டுமல்லாமல் அவரும் இந்த விழா தொடர்பாக வாழ்த்துரை வழங்க வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எல்லாமும் அவரிடத்தில் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும் என்றும் என்னிடம் முதல் அமைச்சர் கேட்டுக்கொண்டார். நான் உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு கொண்டேன் அந்த சமயத்தில் அவர்களிடம் நான் முதல்வர் தெரிவித்த அனைத்தையும் தெரிவித்தேன். இந்த விழாவில் நீங்கள் பங்கேற்று கொள்வது மட்டுமல்லாமல் அந்த விழாவில் சரிசமமாக அமர்ந்து நீங்கள் இந்த விழா தொடர்பாக வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் விருப்பம் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தேன்.

ஆகவே நீங்கள் எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று உங்களுடைய அனுமதியை நாங்கள் கேட்கிறோம் என்று தெரிவித்தேன். அப்போது அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் நான் காரில் சேலம் சென்று கொண்டிருக்கின்றேன் சேலம் சென்ற பின்னர் கலந்தாலோசனை செய்து பதில் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் விழாவிற்கு வருகை தரவில்லை என்று என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் விழாவிற்கு வரவில்லை என்று அசோசியேட் செகரட்டரி அவர்களிடம்தான் தெரிவித்து இருக்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.