விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிப்பு !.. 

0
106
Due to the incessant heavy rains, only the schools operating in this taluk have a holiday notice today!..
Due to the incessant heavy rains, only the schools operating in this taluk have a holiday notice today!..

விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிப்பு !..

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக அதிக கனமழை வரக்கூடும்.இந்நிலையில் தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் மற்றும் மிக அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த பத்து  நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அங்குள்ள தாழ்வானபகுதிகளில் மழைநீர் தேங்கியது.

குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால் பல மாவட்டகளில் வேரோடு மரம் சரிந்து விழுகின்றது. அதனால் போக்குவரத்து பலமணிநேரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K