ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

0
226
#image_title

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு! 

ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய வாலிபர் ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்து கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் உள்ள கடன் செயலிகளின் மூலம் ரூ 20 லட்சம் வரை கடன் பெற்ற மருந்து விற்பனை பிரதிநிதி அதனை ஆன்லைன் ரம்மியில் செலுத்தி ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்த சென்னை சேர்ந்த வினோத்குமார் என்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில்  உள்ள  தாம்பரம் பகுதியில் மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 36. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு ஆன்லைன் ரம்மியில் அதிகம் நாட்டம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் இழந்த பின்னர்  அவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்று ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை விளையாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ரம்மி மூலம் அவர் ரூ 20 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.  இதனால் அதிக பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். பணத்தை இழந்த சோகம் மற்றும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி ஒரு பக்கம் என கடும் பணம் நெருக்கடி காரணமாக அவருக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீவிர மன உளைச்சலால்  அவர்  வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்த வினோத்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.