போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்!

0
87

தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் பதிவு செய்யப்பட்ட 4 வருட போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) 12 டோலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

 

நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி, ரவி தேஜா மற்றும் இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் 6 ம் தேதியும், ராணா டகுபதி செப்டம்பர் 8 ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் 9 ம் தேதியும் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆகஸ்ட் 31 ம் தேதி இயக்குனர் பூரி ஆஜராக வேண்டும் என சொல்லி உள்ளது.

 

மற்றவர்கள் சார்மி கவுர், நவ்தீப், முமைத் கான், நந்து, தருண் மற்றும் தனிஷ். ரவியின் டிரைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

 

 

ED அதிகாரி கூறியதாவது, தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் சுமார் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 குற்றப்பத்திரிகைகள் நிரப்பப்பட்டு உள்ளது. பெரும்பாலும் 8 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் மிகவும் கீழே உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள். நாங்கள் கலால் அதிகாரிகளை சாட்சிகளாக அழைத்து உள்ளோம். . விசாரணையில் டோலிவுட் பிரபலங்களின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், எங்களுக்கு சான்றுகள் கிடைக்கும் வரை டோலிவுட் பிரபலங்கள் சாட்சிகளாக கருதப்படுவார்கள். “என்று ED அதிகாரி கூறியுள்ளார்.

 

தெலங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் ரூ .30 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 வழக்குகளை பதிவு செய்து உள்ளது. அந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக 11 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Kowsalya