பிணமாக மீட்கபட்ட டிரைவர்.. முன்விரோதத்தால் கொலையா?

0
112

கார் ஓட்டுநர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், எலேசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 30வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரிடம் இருந்த அடையாள அட்டைகளை வைத்து அவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த சாந்த குமார் என்பதும் அவர் அந்த பகுதியில் கார் ஓட்டுநராக இருந்து வருகிறார்.

இதனை அடுத்து, காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன் மதுபாருக்கு சென்ற அவருக்கும் அந்த பகுதி ரவுடி நேபாளி மஞ்சு என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சாந்தகுமார் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை வாபஸ் வாங்க கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.முதலில் வாபஸ் பெற மாட்டேன் என கூறிய அவார் பின்னர் புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.இதனிடைடே நேற்று முன் தினம் அவர் மாயமானார்.அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவிலை என கூறப்படுகிறது.

இதனால், அவரை மஞ்சு கூட்டாளிகளுடன் அவரை கடத்தி கொலை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து, பெங்களூருவிற்கு சென்ற தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.