இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
425

இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்?

பொதுவாக டைபாய்டு காய்ச்சலானது அதிகமாக செப்டம்பர் மாதத்திலிருந்து பரவத் தொடங்கும்.காரணம் இது மழைக்காலமும் அல்லாமல் வெயில் காலமும் அல்லாமல் ஒரு அசாதாரண,வானிலையாக இருக்கும்.எனவே தமிழ்நாட்டை பொருத்தவரையில் இந்தக்
காலகட்டத்தில் பெரும்பாலானோர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை எடுத்து உடலுக்குள் செலுத்தி கொள்வதனால் தான் வருகின்றது.

அதாவது அசுத்தமான நீரை பயன்படுத்துவது,சுத்தமற்ற உணவுகளை உண்பது கைகளை கழுவாமல் சாப்பிடுவது போன்றவற்றினால் அதிலும் குறிப்பாக நீரினால் பரவக்கூடிய ஒரு பாக்டீரியா ஆகும்.

ஆண்டுதோறும் உலகளவில் இந்த பாக்டீரியாவில் 21.5 லட்சம் பேர் பாதிப்படைகின்றனர்.இந்த டைபாய்டு காய்ச்சலை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் எலும்பு மஞ்ஜைகளில் பரவி உணவு பாதையில் ஓட்டை ஏற்பட்டு இறக்ககூட நேரிடும்.

இந்த காய்ச்சல் வருவதற்கான முக்கிய அறிகுறிகள்?

அதிக காய்ச்சல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.

இந்த காய்ச்சலை நாம் சிறுநீர் மாதிரிகள் மற்றும் ரத்த சோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் இந்த பாக்டீரியா தொற்றின் அறிகுறியே நமக்கு தெரியவரும்.

இது குணமடைய ஒரு மாதங்களுக்கு மேலே ஆகும்.

* 104 ஃபேரன் டிகிரி வரை காய்ச்சல் ஏற்படும்

* அதீத உடல் சோர்வு ஏற்படும்

*முதல் ஏழு நாட்களில் அதீத தலைவலி ஏற்படும்.இதய துடிப்பு சீரற்று இருக்கும்.

* பசியின்மை,நீங்கள் சாப்பிட நினைத்தாலும் சாப்பிட முடியாத அளவிற்கு பசியின்மை ஏற்படும்.

*சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்.

* நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

*இந்த காய்ச்சலை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் மூளைச்சாவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு.

சிகிச்சை முறை?

1. 5 அல்லது 6 கிராம்பை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுக்கும் போதெல்லாம் இந்த தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் கொடுக்க வேண்டும்.

2.இரண்டு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு கொத்தமல்லியை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின் இந்த தண்ணீரையும் டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கொடுக்கலாம்.

(ஒருநாள் கிராம்பு தண்ணீர் ஒருநாள் கொத்தமல்லி தண்ணீர் என்று மாற்றி மாற்றி கொடுக்கலாம்)

3. இரண்டு டீஸ்பூன் கல் உப்பை எடுத்து 30-45 நொடிகள் மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த வருத்த கல் உப்பை,200ml தண்ணீரில்,நன்றாக கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் கொடுக்க வேண்டும்.

4. சுத்தமான தேனை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் குடித்து வர வேண்டும்.

மேலே கூறிய நான்கு வழி முறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.இதை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு,நம் வீட்டில் விரைவாக டைபாய்டு காய்ச்சல் குணமடைய செய்யும் வழிமுறைகள் ஆகும்.

முக்கிய குறிப்பு

மருத்துவர்கள் இந்த
பாக்டீரியாவிற்கான தடுப்பு மருந்துகள் உட்செலுத்திய பிறகு ஓரிரு நாட்களிலேயே நமது உடலில் முன்னேற்றம் தெரியும்.ஒரு வாரத்திலேயே உடல் சரியானது போன்ற நிலை தெரியும்.ஆனால் இந்த பாக்டீரியாவின் தாக்கம் ஒரு மாதம் வரை நம் உடலினுள் இருக்கும்.இதனால் மருத்துவர்கள் கூறுகின்ற மருந்து மாத்திரைகளை நாம் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.காய்ச்சல் சரியாகிவிட்டது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது.மேலே கூறிய வீட்டு வைத்தியம் செய்து வந்தால் இந்த காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபடலாம்.

 

author avatar
Pavithra