சளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்!

0
87

சளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்!

சளி, நெஞ்சு சளி, தொடர்ந்து இருமல் மற்றும் தும்மல் போக இந்த இயற்கை முறையை நாம் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

உங்களுக்கு சளி பிடிக்கப் போகிறது என்று தெரிந்தாலே இந்த இயற்கை முறையை நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது சளி உடனடியாக நிவாரணம் அடையும்.

தேவையான பொருட்கள்:

1. பால்- 1 டம்ளர்

2. மஞ்சள் -1/4 டீஸ்பூன்

3. மிளகு தூள் -1/4 டீஸ்பூன்

4. பனங்கற்கண்டு -2 ஸ்பூன்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

2. நன்கு கொதித்த பின் ஒரு டம்ளருக்கு மாற்றி வைக்கவும்.

3. பின் அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.

4. பனங்கற்கண்டு 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம். இதை காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வரும் பொழுது எப்பேர்பட்ட சளி நெஞ்சு சளி, தும்மல் ஆக இருந்தாலும் வெளிவந்து குணமாகிவிடும்.

author avatar
Kowsalya