வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! 

0
201
#image_title

வாயு வயிற்று பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இது தினமும் காலை குடிங்க! 

நீங்கள் அடிக்கடி மாத்திரை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் உங்களுக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம். வாயு பிரிதல் வயிற்று வலி செரிமான பிரச்சனை போன்றவற்றிற்கு மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

வாயு பிரச்சனை வருவதற்கு பெரும்பாலும் உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம். கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் உணவில் கணிசமான அளவு சாப்பிட்டாலே இந்த தொந்தரவை குறைக்கலாம்.

**ஒரு இடிக்கின்ற கல்லில் அரை ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை போட்டு இடிக்கவும்.

** மல்லி விதைகள் நன்கு இடிப்பட்டதும் அரை ஸ்பூன் பெருஞ்சீரகம், அரை ஸ்பூன் சீரகம், 4 மிளகு, ஒரு துண்டு இஞ்சி இவைகளை சேர்த்து நன்றாக கல்லில் இடித்துக் கொள்ளவும்.

** ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் இழுத்து வைத்த கலவையை போட்டு ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

** இறக்கி வைக்கும் சமயத்தில் சிறிது உப்பு சேர்க்கவும். இதை வடிகட்டி பருகலாம். எட்டு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 ஸ்பூன் அளவு, ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 4 ஸ்பூன் அளவும், கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு கால் கப் அளவு கொடுக்கலாம். பெரியவர்கள் அரை கப் அளவு குடிக்கலாம்.

இதை காலை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதொரு பலனை தரும். வாயு தொந்தரவு செரிமான பிரச்சனை உள்ளவர்கள் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து ஆவியில் வேகவைத்த பண்டங்களை உண்பது நல்லது.