உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் யார்…. சூசகமாக உணர்த்திய பயிற்சியாளர் டிராவிட்!

0
82

உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் யார்…. சூசகமாக உணர்த்திய பயிற்சியாளர் டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் முழுவதுமாக விலகினார். அவருக்கு பதில் சிராஜ் இந்த தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் பூம்ராவுக்கு மாற்று வீரராக யார் இறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக இரண்டு வீரர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷமி ஏற்கனவே உலகக்கோப்பை அணியில் ஸ்டாண்ட்பை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 இதுபற்றி பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “பூம்ராவுக்கு பதில் யார் என்பதை ஆஸ்திரேலியா சென்றபிறகுதான் முடிவு செய்வோம்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இதுபற்றி பேசுகையில் “பூம்ராவுக்கு மாற்று யார் என்பதை முகமது ஷமி உடல்நலம் சீராகி மீண்டு வந்த பின்னர்தான் முடிவு செய்வோம்” எனக் கூறியுள்ளார். இதனால் முகமது ஷமிக்கே இந்திய அணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது.