இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்!

0
76

இந்திய அணியின் முக்கிய அங்கத்தினருக்கு கொரோனா…. அதிர்ச்சி தகவல்!

இந்திய அணி ஆசியக்கோப்பைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, ரசிகர்களால் ‘சுவர்’ என்று அன்போடு அழைக்கபடும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர் வழிகாட்டுதலில் இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களை வென்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி 20 உலகக்கோப்பையை வெல்வதே தற்போது இந்திய அணியின் இலக்காக இருக்கும். அதற்கு டிராவிட்டின் வழிகாட்டுதல் பெரும் துணையாக இருக்கும்.

இந்திய அணி இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ள ஆசியக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதையடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரில் அணியை வழிநடத்துவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக வெளியான அறிவிப்பில் ஆசிய கோப்பை 2022 க்கு அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட வழக்கமான சோதனையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கோவிட்-19  இருப்பது உறுதியாகியுள்ளது என்று பிசிசிஐ அறிக்கை தெரிவித்துள்ளது. இதுபற்றி “திரு. டிராவிட் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார் மற்றும் அறிகுறிகளுடன் இருக்கிறார். அவர் கோவிட்-19 இல் இருந்து குணமானதும் அவர் அணியில் இணைவார். மீதமுள்ள அணியினர் 23 ஆகஸ்ட் 2022 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கூடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளது.