உடனடியாக சட்டத்தை நிறைவேற்றுங்கள்…! டாக்டர் ராமதாஸ் கோரிக்கை…!

0
70

இணையதள சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக அரசு உடனே அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவர் மகன் குமரேசன் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் பெரம்பூர் அருகே தன்னுடைய நண்பர்களுடன் வாடகை வீட்டில் குடியிருந்து.

வந்தார் இணையதள ரம்மி விளையாட்டில் பங்கு கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த அவர் நெடுநாட்களாக அவருடைய சொந்த ஊருக்கு வராமல் இருந்தார். என்று சொல்லப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த குமரேசனின் கைபேசி அலாரம் அடித்து கொண்டிருந்தது. அந்த சப்தம் கேட்டு அவருடைய நண்பர்கள் அங்கே சென்று பார்த்து இருக்கிறார்கள்.

அந்த சமயம் குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை குறிப்பிடும் வகையில் இணையதள சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.

இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில் ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த குமரேசன் என்கின்ற இளைஞர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

அவருடைய குடும்பத்திற்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

சென்ற சில வாரங்களில் சுமார் பத்துக்கும் மேலானவர்கள் இணையதள சூதாட்டத்தில் பணத்தை பரிகொடுத்து தற்கொலை செய்து இருக்கிறார்கள் எனவே இந்த இணையதள சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக அவசர சட்டத்தினை பிறந்திட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.