தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

0
107

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு உலகம் முழுவதும் சுமார் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் உலக அளவில் பொருளாதாரம் மிக மோசமாக பாதிப்படைந்து இருக்கிறது. இதன் காரணமாக, பல நாடுகள் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. சீனாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வருவதற்கும் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது, அதே சமயம் தற்போது இந்த நோய் தொற்றுக்கு எதிரான மாத்திரைகளும் தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த மாத்திரைகள் இன்னும் பயன்பாட்டிற்கு வர வில்லை அது பரிசோதனை நிலையிலேயே தான் இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 100 கோடி பேர் என்ற அளவை எட்டி சாதனை படைப்பதற்காக தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் தன்னுடைய வலைதள பதிவில் விடுத்திருக்கின்ற கோரிக்கை என்னவென்றால், தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

மதுக்கடைகள் அவசியம் இல்லை, ஆனாலும்கூட கட்டுப்பாடுகள் இல்லாமல் அவை செயல்பட்டு வருகின்றன. ஆகவே அவற்றை உடனடியாக மூட வேண்டும், பார்கள் தான் நோய்த்தொற்று பரவலின் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. இருந்தாலும் அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன நோய்களுக்கு வழிவகுக்கும் மதுக்கடை மற்றும் பார்களையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.