டாக்டர் ராமதாஸ் அவர்களின் ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணம்!!

0
214
#image_title

டாக்டர் ராமதாஸ் அவர்களின் ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணம்!!

பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும், தமிழ் மொழியை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை சென்னையில் இருந்து வரும் 21ம் தேதி தொடங்குகிறார். கோயில், நீதிமன்றம், பெயர்பலகை உள்ளிட்ட எதிலுமே தமிழ் மொழியை காண முடியவில்லை என்றும்  அன்னைத்தமிழை மீட்டெடுப்பதற்காக சென்னை முதல் மதுரை வரை இந்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21ம் தேதி உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை தமிழைத்தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளப்போவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

வருகிற 21ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பரப்புரை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது மறைமலைநகரில் முடிகிறது. மறுநாள் 22ம் தேதி அன்று மதுராந்தகத்தில் தொடங்கி திண்டிவனத்தில் இந்த பரப்புரை நிறைவுபெறுகிறது. 23ம் தேதி புதுச்சேரியில் தொடங்கி கடலூரிலும், 24ம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி மயிலாடுதுறையிலும், 25ம் தேதி குற்றாலத்தில் தொடங்கி கும்பகோணத்திலும் நிறைவுபெறுகிறது. 26ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நிறைவடைகிறது. 27ம் தேதி வல்லத்தில் தொடங்கி திருச்சியிலும், 28ம் தேதி திண்டுக்கல்லில் தொடங்கி மதுரையில் இந்த பயணம் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Parthipan K