மத்திய அரசிற்கு அதிர்ச்சிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ்!

0
152

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆறாம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று காலை ஏழுமணிமுதல் இரவு ஏழுமணிவரை அமைதியான முறையில் நடந்தது.வாக்குப்பதிவு முடிந்து அன்று இரவே வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

அதேபோல இந்த வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.என தெரிகிறது.இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வலைதள பக்கத்தில் நியாயமான அதேவேளையில் சுதந்திரமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கொடுத்த 40 பரிந்துரைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பான விரிவான விவரங்கள் ஓரிரு தினங்களில் என்று ஒரு பதிவை போட்டு இருக்கிறார். இது மத்திய அரசை அதிர்ச்சியடைய செய்திருப்பதாக சொல்கிறார்கள்.