திமுகவை கலாய்த்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
90

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் பொருட்டு தங்களுடைய தேர்தல் வேலைகளில் மிக தீவிரமாக செய்து வருகிறார்கள்.அந்தவகையில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 10 தொகுதிகள் என்ற வகையில், அவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு இளைஞர்களின் ஆதரவு மிக அதிகமாக இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார்.அதேபோல எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளும் கட்சியான அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதோடு தமிழக அரசு எதைச் செய்தாலும் அதில் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து அதை மக்களிடம் சேர்ப்பதை இவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற கருத்து தமிழகம் முழுவதிலும் பரவலாக இருந்து வருகிறது.

கடந்த பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத திமுக மக்களுக்கு நல்ல திட்டங்கள் எதையும் தெரிவிக்காமல் கடந்த 10 ஆண்டுகாலமாக சிறப்பாக ஆட்சி நடத்திவரும் அதிமுகவை இப்போது தேர்தல் லாபத்திற்காக வந்து குறை கூறிக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி தமிழகம் முழுவதும் இருக்கிறது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நெய்வேலி சட்டசபைத் தொகுதி முத்தாண்டி குப்பம் என்ற இடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெகன் அவர்களை ஆதரிக்கும் விதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரத்தில் அவர் தெரிவித்ததாவது திமுக என்று சொன்னாலே மக்களுக்கு தானாகவே பயம் வந்து தொற்றிக் கொள்கிறது. அவர்களின் ஆட்சி காலம் தமிழகம் முழுவதுமே ஒரு இருண்ட காலமாக இருந்து வந்தது என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

சென்ற நான்கு ஆண்டுகாலமாக தமிழ்நாட்டிலே அமைதியான முறையில் நல்லாட்சி நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கின்ற அவர் எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சிக்கு ஆக்கப்பூர்வமான சில விஷயங்களை எடுத்து தெரிவிக்கலாம். ஆனால் தற்போது இருக்கக்கூடிய எதிர்கட்சியான திமுகவிற்கு எதுவுமே தெரியாது சட்டையை கிழித்துக்கொண்டு ரோட்டில் அமர்ந்து விளம்பரத்தில் நடிக்க தான் தெரியும் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

இதுவரையில் ஆளுங்கட்சியை குறை கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள் திமுகவை சார்ந்தவர்கள் அதைத் தாண்டி நல்ல விஷயங்கள் எதையாவது என்றாவது ஒருநாள் ஆளுங்கட்சிக்கு ஆலோசனையாக கூறியிருப்பார்களா? அதோடு திமுக ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் அவர்களுடைய கட்டப்பஞ்சாயத்து போன்ற பிரச்சனைகள் ஆரம்பமாகி விடும் அதோடு இதுவரையில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை இல்லாமல் இருக்கிறது அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தொடர் மின்வெட்டு பிரச்சினை உண்டாகும் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.