Connect with us

Breaking News

தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட மருத்துவ ராமதாஸ் கோரிக்கை

Published

on

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட மருத்துவ ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கான குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது நினைவை போற்றி வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் அரசு விழாவாக கொண்டாட பல ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக தான் கோரிக்கை வைத்ததாகவும் அவர் நினைவு படுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

1.தேவேந்திரர்களின் உரிமைகளுக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி இமானுவேல் சேகரனாரின் 65-ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது தியாகத்தையும், போர்க்குணத்தையும் போற்றுவோம்.

Advertisement

Advertisement

2. தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை 30 ஆண்டுகளுக்கு முன் சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த இராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள். அந்த பெருமிதம் எனக்கு எப்போதும் உண்டு!

3. தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். வரும் அக்டோபர் 9-ஆம் தேதி அவரது 98-ஆவது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு ஆணையிட வேண்டும்!(3/4)

Advertisement

Advertisement

4. இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் ஓராண்டுக்கு அதைக் கொண்டாடவும், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!(4/4)

Advertisement