Dr Ramadoss invites MK Stalin to Thailapuram for Political Training-News4 Tamil Online Tamil News Channel
Dr Ramadoss invites MK Stalin to Thailapuram for Political Training-News4 Tamil Online Tamil News Channel

மட்டமாக பேசும் ஸ்டாலினை அரசியல் கற்று கொள்ள தைலாபுரம் பயிலரங்கம் அழைத்த மருத்துவர் ராமதாஸ் விரக்தியில் திமுக தொண்டர்கள்  

மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளன. தேசிய அளவில் ஆளும் பாஜக தலைமையில் ஒரு அணியும்,காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மற்றொரு அணியும் எதிரெதிராக மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள்,மதிமுக மற்றும் விசிக இணைந்து ஒரு அணியாகவும்,மறுபுறம் ஆளும் அதிமுக,பாமக,பாஜக மற்றும் தேமுதிக இணைந்து மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. ஆரம்பத்தில் ஆளும் கட்சியான அதிமுக உட்கட்சி பிரச்சனைகளால் பிளவுபட்டு இருந்ததால் அதன் வாக்குகள் பிரியும் அதனால் திமுக பெரும்பாலான பகுதிகளில் சுலபமாக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பெரும் நம்பிக்கையுடன் இருந்தார்.

இந்நிலையில் கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்த்திருந்த திமுகவிற்கு பாமக அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் அதே நாளில் பாஜகவும் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது இது மட்டுமில்லாமல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மிஞ்சும் வகையில் அக்கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும் அன்றே பேசி முடிக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக தலைவர் ஸ்டாலின் விரக்தியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தததால் பாமக நிறுவனரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த தரக்குறைவான விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்காமல் பாமகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வோம் என நேர்மறையான அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஸ்டாலின் அவர்களோ தொடர்ந்து பாமகவையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தொடர்ந்து தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது ஸ்டாலினின் விமர்சனம் குறித்து பதிலளித்த அவர் ஸ்டாலினின் பேச்சு மட்டமாக இருக்கிறது,என்ன பேசுவது என்ன பேச கூடாது என்றே தெரியவில்லை. அரசியலுக்காக தைலாபுரத்தில் நாங்கள் பயிலரங்கம் நடத்துகிறோம். வேண்டுமென்றால் அங்கு வந்து அவர் பயிற்சி எடுத்து கொள்ளலாம் என்று நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் ஸ்டாலினுக்கு தூங்கும் போதும் நடக்கும் போதும் முதலமைச்சர் கனவு தான், அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுகவை முடிச்சு வைக்க போவது இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் தான். ஏனென்றால் அவரது பேச்சுகளும் செயல்பாடுகளும் அந்த அளவிற்கு மகா மட்டமாக இருக்கிறது.என்ன பேச வேண்டும் என்ன பேச கூடாது என்பது பற்றி கூட இன்னும் அவருக்கு தெரியவில்லை. அரசியலை கற்று கொள்ள தைலாபுரம் தோட்டத்தில் நாங்கள் அரசியல் பயிலரங்கை நடத்துகிறோம் அவர் விருப்பபட்டால் அங்கு வந்து பயிற்சி எடுத்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

ஒருபுறம் திமுக தொண்டர்கள் பிரியாணி கடை,டீ கடை என அராஜகம் செய்து கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கி வரும் வேளையில் கட்சியின் தலைவரான ஸ்டாலினின் பேச்சே இவ்வளவு மட்டமாக இருப்பதால் கட்சியின் எதிர்காலமே கேள்வி குறியாக இருப்பதாக கட்சி தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.