அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி

0
79

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க பயற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர்
ச. கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்கும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்க்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்பு கின்றனர்.

அதனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருக்கிறது.

தொடக்க நிலை வகுப்புகளுக்கு 2-ம் பருவத்துக்கு 12 பாட வேலைகளும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 30 பாட வேலைகளும் ஆங்கில பேச்சுத்திறன் கற்பிக்கப்படவுள்ளது.
1முதல் 5-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கான படவேலையிலும், 6முதல் 9-ம் வகுப்புவரை வாரத்துக்கு 45 நிமிடத்துக்கான பாட வேளையிலும் ஆங்கில பயற்சி அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
CineDesk