Connect with us

Breaking News

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்!

Published

on

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை துண்டு துண்டாக வெட்டி உடலை கால்வாயில் வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேற்கு வங்காள  மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். திருமணம் ஆகி ஆறாண்டுகள் ஆன இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் ரேணுகாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் பெயரில் ரேணுகாவின் கணவர் முகமதுவை பிடித்து விசாரிக்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரேணுகாவை கொன்றதாக  ஒப்புக்கொண்டார்.

Advertisement

இது பற்றி அவர் கூறுகையில் மனைவி ரேணுகா அழகு பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பியூட்டிசியன் பயிற்சி பெற்று வந்ததாகவும் அதன் மூலம் பல முன் பின் தெரியாத ஆண்களுடன் அவர் போனில் பேசி வந்ததாகவும் இதனால் தனக்கு எரிச்சலும் மனைவியின் நடத்தை மீது சந்தேகமும் ஏற்பட்டது.

இதனை அடுத்து கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாள் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கால்வாய்க்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குப்பையில் போட்டு மகாநந்தா கால்வாயில் வீசி விட்டதாகவும் போலீசில் தெரிவித்தார்.

Advertisement

போலீசார் மாநில பேரிட மீட்பு குழு உதவியுடன் கால்வாயில் ரேணுகாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்பு ஒரு சூட்கேசில் உடற்பகுதி  கண்டறியப்பட்டது. ஆனால் தலை மற்றும் பிற உறுப்புகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே ஷ்ரத்தா என்ற பெண் அவருடைய காதலானால் இதே போல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். புத்தாண்டு அன்று அஞ்சலி என்ற பெண் தலைநகரில் காரில் 12 கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்தார். தற்போது இந்த சம்பவம் நடந்து தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பின்மையை உறுதி செய்துள்ளது.

Advertisement