சிறப்பு பூஜை செய்தால் இரட்டிப்பாகும் பணம்! மூன்றாவது முறை அலேக்காக தூக்கிய பலே தம்பதி!

0
82
Double the money if you do special puja! The ballet couple who lifted Alec for the third time!
Double the money if you do special puja! The ballet couple who lifted Alec for the third time!

சிறப்பு பூஜை செய்தால் இரட்டிப்பாகும் பணம்! மூன்றாவது முறை அலேக்காக தூக்கிய பலே தம்பதி!

மக்களின் பேராசையின் காரணமாக நாளுக்கு நாள் மக்களை ஏமாற்றும் கும்பல்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். உழைக்காத பணம் நமக்கு எப்படி சேரும் சொல்லுங்கள். யாராவது பணம் இரட்டிப்பாக்கி தருகிறேன் என்றால், கண்ணை மூடிக்கொண்டு, எடுத்துக்கொண்டு போய் தருவது, ஒரு சில நபர்களுக்கு குறிக்கோளாக இருக்கிறது.

எதற்கு இந்த பேராசை பிறரிடம் கடன் வாங்கி தந்துவிட்டு, முழுவதும் போன பிறகு முக்காடு போட்டு உட்கார வேண்டியது. அப்படித்தான் பலரது வாழ்க்கை போய்க்கொண்டு உள்ளது. கடன் வாங்கியாவது அப்படி பணத்தை இரட்டிப்பு செய்து லாபம் பார்த்துவிட வேண்டும் என்றும் சிலர் உள்ளனர். இதே போல் தெலுங்கானாவில் சிறப்பு பூஜை செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறிப்பாக அதிலாபாத் மாவட்டத்தில், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுக்ரீவ் – சங்கீதா தம்பதி அந்த மாறி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். அப்பகுதிகளில் பணம் வைத்திருப்பவர்களை பார்த்து, அவர்களை குறிவைத்து, அவர்களிடம் நட்பாக பழகி அதன் பிறகு, தாங்கள் ஒரு சிறப்பு பூஜை செய்கிறோம் என்றும், அதன் மூலம் நீங்கள் தரும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறியுள்ளனர்.

அதை நம்பிய முகமது ஷாரூக் என்பவர் கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாயை ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த தம்பதிகள் ஹோமத்தில் வைத்து அதன் பிறகு 80 ஆயிரமாக எடுத்துச் சென்றதாகவும், இரண்டாவது முறை ஒரு லட்ச ரூபாயை வைத்து ஒன்றரை இலட்சமாக எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பேராசைப்பட்டு தனது வீட்டையே விற்று இருபத்தி ஒன்பது லட்சம் ரூபாய் எடுத்துவந்து, அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அந்த மோசடி தம்பதிகள் இதை 40 லட்சமாக மாற்றி தருவதாக கூறி ஆசைவார்த்தை கூறி அனுப்பியுள்ளனர். அதன் பிறகு அவர் இரண்டு நாள் கழித்து வந்து பார்த்தபோது, அந்த தம்பதிகள் அந்த இடத்தில் இல்லை. எனவே அதிர்ச்சி அடைந்த முகமது ஷாருக் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அவரது புகாரின் பேரில் தனிப்படை அமைத்து அதன் பிறகு போலீசார் மோசடி செய்த தம்பதியை கைது செய்து வைத்துள்ளனர்.