இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு! அமலாக்கப் பிரிவு முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார் டிடிவி தினகரன்!

0
51

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு பலவித இன்னல்கள் வந்தது. அந்தக் கட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடுமையாக முயற்சித்து பார்த்தார்கள். ஆனாலும் அவருடைய முயற்சிகள் பலிதமாகவில்லை.

ஆனால் கட்சி போனால் பரவாயில்லை இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது நம் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று சசிகலாவும், தினகரனும், முயற்சி செய்தார்கள். ஆனாலும் அதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் சந்திரசேகர் என்பவர் மூலமாக கடந்த 2017ஆம் வருடம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சந்திரசேகர், போன்றோர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கடந்த 12 ஆம் தேதி காலை 11 மணியளவில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தின் டிடிவி தினகரன் ஆஜரானார். அப்போது டிடிவி தினதரனிடம் அமலாக்கத்துறை 11 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த விசாரணையின்போது லஞ்சம் தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய ஆவணங்கள் இல்லாத போதிலும் கூட சுகேஷ் சந்திரசேகர் கொடுக்கக்கூடிய வாக்குமூலங்களினடிப்படையில் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் தர முயற்சித்ததாக பதிவான வழக்கு குறித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கமளிக்கவிருக்கின்றார்.