இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!.

0
165
Don't worry anymore!.. Discovery of test kit to diagnose monkey measles!.
Don't worry anymore!.. Discovery of test kit to diagnose monkey measles!.

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!.

கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக உலக மக்களை ஆட்டி வருகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகிறது.இதுவரை மொத்தம் 578,003,88 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 64,09,821 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் இந்திய முழுவதும் பல்வேறு இடங்களில் ஊடரங்கு அமல்படுத்த தொடங்கியது.இந்த தொற்று பல லட்ச கணக்கில் அப்பாவி மக்களை பலி வாங்கியது.இதனை கட்டுக்குள் கொண்டு வர கொரோனா தடுப்பூசி கண்டறிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதனால் கொரோனா சற்று குறைய தொடங்கியது.இருந்தாலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பெருமளவு மக்களின் உயிரை காவு வாங்கியது. இதற்கிடையே தான் பொது மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதார நிறுவனம் வலியுறுத்தியது.

இதனால் மக்கள் சிறிதளவு அமைதி அடைந்த நிலையில் குரங்கு அம்மை எனும் தொற்று நோய் பரவ ஆரம்பித்தது.இந்த நோய் உடம்பில் பல இடங்களில் பெரிய அளவில் கொப்பளங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய தொடங்கும்.

இதன் முதல் அறிகுறியாக காய்ச்சல், சளி,உடல் சோர்வு,தலைவலி அதிக அளவு ஏற்படும்.இதனையடுத்து குரங்கு அம்மையை கண்டறிய பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது.அதில் ஒரு பகுதியாக டிரன்சாசியா பயோ மெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பரிசோதனைக் கருவியை மத்திய அரசு முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய்குமார் சூட் வெளியிட்டார்.

குரங்கம்மை தொற்று உள்ளவருக்கு இந்த கருவியை பயன்படுத்தி மிக எளிதாக எவ்வகை நோய் பாதிப்பு என கண்டறிந்து விடலாம் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் வாஜிராணி தெரிவித்தார்.இந்த நோய் பல்வேறு நாடுகளுக்கிடையே மிக வேகமாக பரவி வரும் குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K