ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை!

0
90

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை!

ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்து முக்கிய தகவலை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஆண்ட்ராய்ட் போனை பொருத்தமட்டில் ப்ளே ஸ்டோரில் எக்கச்சக்கமான மொபைல் செயலிகள் உள்ளன.ஒருசில செயலிகள் சரியாக பணம் கொடுத்தால் மட்டுமே இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு வரும்.அப்படி பல செயலிகள் சமூக வலைதளங்களில் பரவி குவிந்து கிடக்கும். பல பேர் அந்த செயலிகளை பயன்படுத்தினால் வசதியாக இருக்கும் என்பதற்காக அந்த செயலிகளை பயன்படுத்த டவுன்லோட் செய்ய தொடங்குகிறார்கள்.

அதை டவுன்லோட் செய்ய துவங்கும் பொழுது உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் வரும். (Unknown source இந்த செயலியை நீங்கள் உபயோகிக்க வேண்டுமென்றால் settings-> unknown source->On) இதை நீங்கள் ON செய்தால் எந்த வகையான செயலிகள் இருந்தாலும் டவுன்லோட் ஆகிவிடும்.

இப்பொழுது அந்த மாதிரியான Unknown source செயலிகள் நமக்கு ஆப்பு வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. அது நமது மொபைல் போனில் நிபந்தனைக்கு உட்படாத செயலி. அதனை பயன்படுத்தினால் நம்முடைய அனைத்து தகவல்களும் திருடப்படும்.நமக்கு தெரியாமலேயே நம்மிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், வங்கிக் கணக்கின் தகவல்கள் என அனைத்து தகவல்களும் நமக்குத் தெரியாமலேயே எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

எனவே இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை நமக்கு எச்சரிக்கை செய்துள்ளது. உடனடியாக உங்கள் மொபைல் எண்ணில் settings சென்று Unknown source என்ற பட்டனை ஆப் செய்து விடுங்கள்.

author avatar
Kowsalya