யாரை கௌரவிக்க வேண்டுமென்று அறிவே இல்லையா.. இதற்கெல்லாம் உதயநிதி சரியானவரா? ஸ்டேடியத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!

0
93
dont-know-who-to-honor-is-udayanidhi-the-right-person-for-all-this-ex-player-who-was-upset-in-the-stadium
dont-know-who-to-honor-is-udayanidhi-the-right-person-for-all-this-ex-player-who-was-upset-in-the-stadium

யாரை கௌரவிக்க வேண்டுமென்று அறிவே இல்லையா.. இதற்கெல்லாம் உதயநிதி சரியானவரா? ஸ்டேடியத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டியானது நமது இந்தியாவில் நடைபெற உள்ளதால் இதன் உலக கோப்பையை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மக்களின் பார்வைக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மும்பையில் இருந்து ஹாக்கி உலகக் கோப்பை ஆனது தமிழ்நாட்டிற்கு வந்ததை அடுத்து மக்களின் பார்வைக்காக டாக்டர் ராதகிருஷ்ணன்  ஸ்டேடியத்தில் இளைஞர்கள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதனை பெற்றுக் கொண்டார்.

இவ்வாறு உலக கோப்பையை பெரும் சமயத்தில், முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர்களை கௌரவித்து மரியாதை செலுத்தும் வகையில் மேடையில் அமர வைக்காமல் அதற்கு மாற்றாக அமைச்சர் மேயர் என்று கட்சி நிர்வாகிகளை அமர வைத்தது முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரரான பாஸ்கரன் என்பவருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் விளையாட்டு வீரரான பாஸ்கரன் பலமுறை முன்னாள் ஹாக்கி பிளேயர்களை மேடையில் அமர வைக்க கூறியும் அதனை கேட்காததால் நேரடியாக அமைச்சர் உதயநிதியிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

முன்னாள் விளையாட்டு வீரர்கள் அமராமல் இவ்வாறு சம்பந்தமே இல்லாதவர்கள் அமர்வது நியாயமா என்ற வகையில் சரமாரியாக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அங்கிருந்து அமைச்சர் உதயநிதி உடனடியாக முன்னாள் விளையாட்டு வீரர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்து மேற்கொண்டு நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் தொடங்கியது.

இவ்வாறு முன்னாள் விளையாட்டு வீரர் பாஸ்கரன் கோவம் அடைந்து சரமாரி கேள்வி எழுப்பியதால் அவ்விடம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டதை அடுத்து ,  விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் சம்மந்தமே இல்லவர்களுக்கு மரியாதை செலுத்தி நிகழ்ச்சி நடத்துவதா என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேபோல நிகழ்ச்சி குறித்து முன்னேற்பாடுகள் பற்றி சிறிதாவது உதயநிதி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டாமா? இவரெல்லாம் அமைச்சரா,இதற்கு சரியானவரா  என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.