நாளுக்கு நாள் தொழில்நுட்பம் பெருகி அனைத்தும் ஆன்லைன் மையமாக மாறி வருகின்றது. இப்பொழுது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது ஃபேஸ்புக் செயலி தான்.இதன் மூலம் நமக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என பல பேருடன் இணைந்து நமது தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.
ஆனால் அதில் ஆபத்தும் இருக்கின்றது.அப்படி பேஸ்புக்கில் உள்ள இந்த 10 விஷயங்களை கண்டிப்பாக செய்யவே கூடாது என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
1. தொலைபேசி எண்:
தொலைபேசி எண்ணை இந்த மாதிரியான ஃபேஸபுக் செயலியில் பயன்படுத்தும் பொழுது அது மற்றவர்களின் மூலம் தவறாக பயன்படுத்தப்படும். குறிப்பாக பெண்கள் தங்களின் தொலைபேசி எண்ணை ஃபேஸ்புக் செயலியில் வெளிப்படுத்தும் பொழுது ஏராளமான பிரச்சினைகள் உருவாகலாம். அதனால் தொலைபேசி எண்ணை கண்டிப்பாக பதிவிடாதீர்கள்.
2. நண்பர்களின் பட்டியல்:
நமது பேஸ்புக் அக்கவுண்ட்டில் நண்பர்களின் பட்டியல் நீண்டு இருக்கும். இது நமக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என பலரின் பட்டியலும் அடங்கி இருக்கும்.அப்படி நீங்கள் உங்கள் பேஸ்புக்கில் உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிரும் பொழுது அது முகம் தெரியாத மற்றொரு நபருக்கும் பகிரப்படும் என்பது உண்மையே.அதனால் எதை செய்தாலும் தெளிவாக யோசித்து பின் செய்யுங்கள். இந்த தகவல் உங்களது நண்பர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் பார்ப்பார்கள். அதனால் அதற்கேற்றவாறு உங்களில் செயலியின் அமைப்புகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
3. செல்போன் ஃபேஸ்புக் செயலி:
உங்களது மொபைல் போன்களில் ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் முக்கியமான தகவல். நீங்கள் உங்களது மொபைல் போனில் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் பொழுது அதிகமான பேட்டரி பவர் செலவாகிறது. அதனால் உங்கள் மொபைல் போனும் சீக்கிரமாக பழுதடையும் வாய்ப்புள்ளது. அதனால் கணினி அல்லது மடிக்கணினி மூலம் பேஸ்புக் செயலியை பயன்படுத்துவது ஓரளவுக்கு நன்மை பயக்கும்.
4. சுயவிவரம்:
சுயவிவரம் என்பது உங்களது personal information. உங்களது சுயவிவரத்தை பேஸ்புக்கில் பதிவிடும் பொழுது பேஸ்புக்கில் இருந்து மற்றொரு செயலிக்கு தகவல் பரவுகின்றது. அதேபோல் அந்த நிறுவனம் உங்கள் சுயவிவரத்திற்குச ஏற்றவாறு விளம்பரங்களை அனுப்பி பணம் சம்பாதிக்கிறது அதனால் நீங்கள் உங்களது அமைப்புகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
5. முக விவரம்:
ஃபேஸ்புக்கில் ஒரு வினாடிக்கு 4 ஆயிரம் போட்டோக்கள் பகிரப்படுகின்றன. அப்படி பகிரப்படும் புகைப்படங்கள் யாருடையது என்பதை தெரிந்து கொள்ள முக விவரங்களை ஸ்கேன் செய்து தகவலை சேகரிக்கிறது. அதனால் மற்றவர்களும் உங்களது செயல்களை தெரிந்து கொள்ளுமாறு பேஸ்புக் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது அதனால் இதனை நிறுத்த உங்களது Settings -] Face Recognition என்ற ஆப்ஷனை நிறுத்துங்கள்.
6. இருப்பிடம்:
பேஸ்புக்கில் உங்களது இருப்பிடங்களை பதி விடக்கூடாது. நாம் இந்த நாளில் இந்த நிமிடத்தில் என்ன செய்தோம் என்பதை வரை நாம் ஃபேஸ்புக்கில் பதிவிடும் பொழுது நாம் வீட்டில் உள்ளோமா இல்லையா என்ற தகவல் மற்றவர்களுக்கு பகிரப்படும். அப்படி தெரியும் படி நீங்கள் உங்கள் இருப்பிடத்தை ஷேர் செய்ய கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் பல்வேறு பிரச்சனைகள் இதனால் வரக்கூடும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
7. வங்கி கணக்குகள்:
நாம் ஒரு பொழுதும் ஃபேஸ்புக்கில் வங்கியின் விபரங்களை பதி விடக்கூடாது. ஒரு சிலர் வாங்கும் சம்பளத்தை மிகவும் பெருமையோடு காசோலையை பதிவிட்டு விடுவார்கள். அப்படியும் நீங்கள் பதிவிடும் பொழுது பல மோசடி கும்பலால் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
8. உறவு நிலை:
நீங்கள் உங்களின் உறவு நிலையை பதி விடக்கூடாது. ஏனெனில் மற்றவர்கள் இதை பார்க்கும் பொழுது நான் உங்கள் நண்பனின் நண்பன் என்று சொல்லி வேறு விதமான முறையில் ஏமாற்றலாம். உங்களின் உறவு நிலையை பயன்படுத்திக் கொண்டு வேறு விதமாகவும் உங்களை ஏமாற்றலாம்.
9. பிறந்த தேதி;
பிறந்த தேதியையும் பதிவிட கூடாது. இப்பொழுது அனைத்து இணையதளத்தை எடுத்தாலும் பிறந்த தேதி என்பது முக்கியமாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு சில பேர் தங்களது கடவுச்சொற்களை தங்கள் பிறந்த நாள் மற்றும் தேதியை கொண்டே உருவாக்கியிருப்பார்கள். அப்படி நீங்கள் உங்கள் பிறந்த தேதியை பதிவிடும் பொழுது அதை வைத்து மோசடி கும்பல்கள் மூலம் பிரச்சினை ஏற்படலாம். மற்றும் மூன்றாவது நபர்கள் உங்களை வேறுவிதமான நோக்கத்துடன் நெருங்கவும் முயற்சிக்கலாம்.
10. வெளியூர் பயணம்:
வெளியே எங்கு சென்றாலும் அதாவது வெளிநாட்டிற்கு வெளி ஊருக்கு சென்றாலும் அதை நீங்கள் பேஸ்புக்கில் போஸ்ட் செய்கிறீர்கள். அப்படி நீங்கள் வெளியே செல்லும் போது வீட்டில் யாரும் இல்லாத இந்த சமயங்களில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை திருடும் வாய்ப்பும் உள்ளது.