தமிழகத்தில் அதிமுகவை முழுவதுமாக அழிக்க விரும்புகிறதா திமுக?

0
98

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எப்படியாவது காலுன்ற வேண்டும் என்று பாஜக நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. அதிலும் கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து அதன் முயற்சி தீவிரமடைய தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்து விடும் என்ற காரணத்தால், அதிமுக பலவீனம் அடைய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது.

அதிமுகவுக்குள் உண்டான குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அந்த குழப்பத்தின் மூலமாக அந்த கட்சியை அழித்து விட்டு அந்த இடத்திற்கு பாஜக வர விரும்புவதாக திமுக மற்றும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

ஆனால் அதிமுக சென்ற தேர்தலின் போது பலவீனமாக இருந்ததன் காரணமாக தான் திமுக ஆட்சிக்கு வந்தது, என்பது அனைவரும் அறிந்தது தான்.

இன்னொரு புறம் உற்று நோக்கினால் தமிழகத்தை பொறுத்தவரையில் இரண்டு தேசிய கட்சிகளுமே வளர முடியாததற்கு ஒரே காரணம் அதிமுகவும் திமுகவும், பலமாக இருப்பது தான். அதிமுக பலவீனமடைந்தால் அதனால் பாஜகவை அசுர வளர்ச்சியடையும்.

ஆகவே இதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது அதிமுக பலவீனம் அடைவதை தடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் பாஜக காலூன்றி விடக்கூடாது என திமுக நினைப்பதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. அதாவது தமிழகத்தில் மட்டும் படாமல் மத அரசியலை கையாண்டு வருவது திமுக என்ற ஒரே கட்சி தான் ஆனால் பாஜக தமிழகத்திற்குள் பலமடைந்து விட்டால் திமுக மதத்தை வைத்து அரசியல் செய்வது கடினம்.

ஆகவே நாம் அரசியல் செய்ய முடியாது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு திமுக பாஜக தமிழகத்தில் வளர்வதை எப்படியாவது தடுக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது.

அதன் காரணமாகத்தான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட அதிமுக பலவீனமாக இருப்பதை அந்த கட்சி விரும்பவில்லை.

அதே நேரம் பாஜக விவகாரம் குறித்து திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுவதாவது பாஜக கூட்டணியில் இருந்த அகாலிதளம், சிவசேனா, பகுஜன் சமாஜ், உள்ளிட்ட கட்சிகள் மேலும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், என பல கட்சிகள் இன்று பலவீனமடைந்திருக்கின்றன.

மிகப் பெரிய தலைவரான பிஹார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தற்போது பாஜகவின் தயவில் காலத்தை ஓட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

மாநில கட்சிகளை அழித்துவிட்டு தான் பாஜக வளர்ந்து வருகிறது. அதிமுக என்பது திராவிட கட்சியாக இருந்தாலும். அதன் பலம் என்பது திமுகவின் எதிர்ப்பு வாக்குகள்தான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதிமுக ஒருவேளை பலவீனமடைந்து விட்டால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் இயல்பாகவே பாஜகவிற்கு சென்று விடும். ஆகவே அதிமுக பலவீனப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

திமுக பலமான கட்சியாக தமிழகத்தின் நீடிக்க வேண்டுமானால் அதிமுக பலத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சரிடம் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது.

அதிமுகவில் இருக்கின்ற கே பி முனுசாமி, செம்மலை உள்ளிட்டவர்களும் திமுகவின் 2ம் கட்ட தலைவர்களிடம் அதிமுக பலவீனமடைய துணை போனால் அடுத்த 10 வருடங்களில் தமிழக அரசியல் களம் பாஜக வசம் சென்றுவிடும் என்று எச்சரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவை பாஜக பலவீனப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ப.சிதம்பரம், கே எஸ் அழகிரி, உள்ளிட்டோர் சோனியா மற்றும் ராகுலிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

அதன் காரணமாக தான் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கட்சிகளின் ஆதரவை பெற பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இப்படி அந்த வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.