அரசு மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்! காரணம் என்ன?

0
111

அரசு மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்! காரணம் என்ன?

தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமாக பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்

இந்த நிலையில் மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டதால் ஒருசில மருத்துவ சங்கங்களின் அமைப்பில் இருந்தவர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். இருப்பினும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து இன்று போராட்டம் செய்யும் மருத்துவர்கள் பணித்து திரும்பாவிட்டால் அவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்
இதனை அடுத்து தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் நடத்திவந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர்களின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாகவும் அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டம் வாபஸ் பெற்ற பின்னர் மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது போல் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்களின் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk