பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை!!

0
151
#image_title

பீகாரில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணிக்கு வராத மருத்துவர்கள்! பீகார் சுகாதாரத்துறை நடவடிக்கை!

பீகார் மாநிலத்தில் ஒரு வருடமாக பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பீகார் மாநிலத்தில் ஒரு வருடமாக பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும் சிலர் 5 ஆண்டுகளாகவும் பணிக்கு வராமல் இருந்தது அறிய வந்தது. இது பற்றிய அறிவிப்பு பீகார் மாநில சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்தவர்கள் அனைவரும் 15 நாட்களுக்குள் அனுமதியற்ற விடுமுறைக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களின் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பதில் அளிக்காத அரசு மருத்துவர்களுக்கு மாநில சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதிகபட்ச நடவடிக்கையாக பணியில் தவறு செய்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.