மது பிரியர்களுக்கு இதை கொடுத்தால் போதும் : அரசுக்கு மருத்துவர் அட்வைஸ்!

0
124

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் குடிமகன்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வந்தனர். மேலும் சில இடங்களில் கள்ள மார்க்கெட்டில் சாராய பாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் கேரளாவின் சில இடங்களில் மது பிரியர்கள் சாராயம் கிடைக்காத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர். இதனால் கேரள அரசு ஊரடங்கு உத்தரவு காலத்தில் மட்டும் சாராயம் விநியோகம் செய்ய உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சிலருக்கு மட்டும் பாஸ் வழங்கப்படும் அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் மது வினியோகம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இவ்வாறு சாராயம் வழங்குவது ஏற்க முடியாது மாற்று யோசனைகளை கையால உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மது பிரியர்களுக்கு சாராயம் வழங்குவதை விட போதை மீட்பு சிகிச்சை வழங்குங்கள். மேலும் உயர் நீதிமன்றம் சொன்னபடி கேரள அரசின் பரிந்துரைக்கு அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K