இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

0
98

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

எலுமிச்சைக் கனி ஒரு சிறந்த அதிசயக்கனி என்பார்கள். எல்லாக் காலங்களிலும் இக்கனி கிடைக்கிறது. பித்தம் குறைப்பதால் பித்த முறி மாந்தர் என்றும் அழைக்கப்படுகிறது. இவை தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்குகிறது. எலுமிச்சை பழம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கல் உருவாவது தடுக்கப்படுகிறது.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உள்ளவர்கள் நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்துவதால் நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரிபடுத்தும் எலுமிச்சை சாறு.

உயர்ந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. பொட்டாசியமும் இதில் உள்ளது.உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும்.

எலுமிச்சை பழம் பித்தத்தைப் போக்கும்,தலைவலியை போக்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் நீக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், வாய் நாற்றத்தைப் போக்கும், வாய்ப்புண்களை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சக்காமாலையை நீக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.

எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சக்தி உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி அந்நோயில் இருந்து தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிட்டால் உடனடி தெம்பு வரும். உண்ணாவிரதம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு உண்டால் அஜீரணப் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

author avatar
Parthipan K