ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா!! தெரிஞ்சா இன்னைக்கு சாப்பிட ஆரம்பிப்பீங்க!!

0
185
#image_title

ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா!! தெரிஞ்சா இன்னைக்கு சாப்பிட ஆரம்பிப்பீங்க!!

பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியில் மக்னீசியம் |சத்துக்கள் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது.

பச்சை பட்டாணி பீன்ஸ் குடும்பத்தின் வகையை சார்ந்ததாகும். பச்சை பட்டாணியில் கிட்டத்தட்ட 1300 இனங்கள் உள்ளது. பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

1. மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப்பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள். மேலும் வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2. கண்புரை, மாஸ்குலர் சிதைவு மற்றும் பார்வை இழப்பு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து குறைக்க செய்யும்.

3. வாய் துர்நாற்றமும் குறையும். உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகும்.

4. பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

author avatar
Selvarani