அறிவிருக்கா? 4 பேர் செத்தா என்ன செய்வீங்க! குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆன அண்ணாமலை!

0
97
BJP Ready to help! Annamalai!!
BJP Ready to help! Annamalai!!

அறிவிருக்கா? 4 பேர் செத்தா என்ன செய்வீங்க! குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆன அண்ணாமலை!

மான்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மக்களை பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த நிலையில் பாஜக நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சிலையின் சாலையின் நடுவே பாஜக கொடியை அமைத்துள்ளது.

இவ்வாறு புயல் காற்றினால் பாஜக கொடி வாகனங்கள் செல்வர் மீது பட்டால் விபத்துக்கள் ஏற்படக்கூடும் அதுமட்டுமின்றி முன்பே இது போல உயிர் பலியும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

அந்த வகையில் இது குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், புயல் வரும் நாளன்று இப்படி பிஜேபி கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு உள்ளதா அண்ணாமலை அவர்களே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு அண்ணாமலை சிறிதளவு கூட கோபப்படாமல் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து உள்ளார். அதில், அண்ணா நான் உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் இவ்வாறு கொடிகள் கட்டி இருப்பதை குறித்து அறிவுறுத்தியுள்ளோம் இவ்வாறான தவறு அடுத்த முறை நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்ற வகையில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண்டராகும் விதத்தில் பதிலளித்தார்.

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடுமையாக விமர்சித்தும், அண்ணாமலை அதனை பொறுமையாக கையாண்ட விதத்தையடுத்து செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.