உங்கள் உடலில் இந்த பத்து அறிகுறி இருக்கா?? கட்டாயம் ரத்தசோகை தான்!!

0
202

உங்கள் உடலில் இந்த பத்து அறிகுறி இருக்கா?? கட்டாயம் ரத்தசோகை தான்!!

நமது உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது உடல் பலம் பெற்று அடுத்த அடுத்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய இயலும். அந்த வகையில் ஆண்களுக்கு 14.0 விலிருந்து 17.5 என்ற அளவில் இருக்க வேண்டும்.இதுவே பெண்ணுக்கு 12.3 விலிருந்து 15.3 என்ற அளவில் இருக்க வேண்டும். இதற்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு ரத்த சோகை உண்டாகும். பலருக்கும் இந்த ரத்த சோகைக்காண அறிகுறிகள் காணப்படும்.

அந்த வகையில் முதலில் அவர்களது உடல் எப்பொழுதும் சோர்வு நிலையிலேயே இருக்கும். இரண்டாவதாக அவர்களுக்கு திடீரென்று தலை சுற்றல் ஏற்படும். மூன்றாவதாக, மலம் கழிக்கும் பொழுது அதனை நிறம் வேறுபட்டு காணப்படும். நான்காவதாக, முகத்தின் தோல் வெளுத்து காணப்படும். ஐந்தாவது, திடீரென்று இதயத் துடிப்பு அதிகரிக்கும். அதேபோல திடீரென்று மூச்சு விட சிரமப்படுவர்.

மேலும் நகங்கள் அதீத வெள்ளை நிறத்துடன் காணப்பட்டாலும் ரத்த சோகை காண அறிகுறி. கை மற்றும் கால்களில் அதிக அளவு குளிர்ச்சி உணர நேரிடும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு கண் இமைகள் வெள்ளையாக காணப்படும். இவர்களால் எந்த வேலையும் செய்ய இயலாது மிகவும் பலமினமாகவே உணர்வர்.