உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்!

0
629
#image_title

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்!

நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பாகும்.நுரையீரல் பாதிக்கப்பட்டால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சளி, நிமோனியா ,காச நோய், ஆஸ்துமா என பல நோய்களை உண்டாக்குகிறது.

பொதுவாக ஒருவருக்கு நுரையீரல் நன்கு இல்லை என்பதனை நம் உடல் தெரிவிக்கும் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அது என்னவென்றால் ஒருவருக்கு பல நாளாக இருமல் இருந்தும் அவர் தொடர்ந்து இருமலுக்கு மருந்து எடுத்துக் கொண்டும் இருமல் சரியாகவில்லை என்றால் அவரது நுரையீரல் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தமாகும்.

சில நேரங்களில் அவருக்கு இருமல் உண்டாகும் போது நெஞ்சுவலி ஏற்படலாம். அந்த வலி உடனே உடல் முழுவதும் பரவி தோள்பட்டை வலி வரை எடுத்துச் சென்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.ஒருவர் அன்றாடம் வேலை செய்யும் பொழுது மூச்சு திணறலை அனுபவித்தால் நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.

ஒருவருக்கு இருமல் கடுமையாக இருக்கும் பொழுது வெளிவரும் சளியின் நிறம், அடர்த்தியின் அளவு அதிகரித்தல் மற்றும் சளியில் இருந்து நாற்றம் வருதல் மேலும் சளி மஞ்சள் ,பச்சை மற்றும் சளிகளில் ரத்தம் கலந்து வந்தால் அவர் நுரையீரலில் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தமாகும்.

மேலும் ஒருவருக்கு தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டால் அவரது மூச்சு குழாய் சுருகிறப்பதன் காரணமாக சளிகளில் ரத்தம் கலந்து வருவது உண்டாகிறது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அது ஆஸ்துமா அல்லது லிப்ஸி சீமையாவுக்கான தொடக்கநிலை அறிகுறியாக இருக்கலாம். பாதங்கள் மற்றும் கால்களில் வீக்கம் இருந்தால் அது நுரையீரல் பிரச்சனை இருக்கிறது என்பதனை காட்டும் அறிகுறிகளாக கருதப்படுகிறது.

author avatar
Parthipan K