உங்களுக்கு அதிக கொலஸ்ட்ராலா? இதோ ரத்த அழுத்தம் குறைத்து மாரடைப்பை தவிர்க்கும் அற்புத பானம்!  

0
148
#image_title

உங்களுக்கு அதிக கொலஸ்ட்ராலா? இதோ ரத்த அழுத்தம் குறைத்து மாரடைப்பை தவிர்க்கும் அற்புத பானம்!

உடல் எடை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் உயர் கொலஸ்ட்ரால் இருந்தாலே ஆபத்துதான்! இவை இரண்டில் எந்த ஒன்று இருந்தாலும் இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கும்.

மருத்துவ ஆய்வுகளில் லிப்போ புரோட்டின், எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கும் இதயம் தொடர்பான மாரடைப்பு,  பக்கவாதம், கார்டியோ வாஸ்குலர் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதய நோய் வராமல் தாக்க நாம் உரிய பாதுகாப்பு பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஆரம்பத்தில் கொலஸ்ட்ராலை குறித்து ரத்த அழுத்தம் நீக்கும் எளிய பானத்தை பற்றி பார்ப்போம்.

* இதுக்கு நான் முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் சுரைக்காய். சுரைக்காய் மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட மன சம்பந்தமான வியாதிகளை நீக்கும்.

* சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கி ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.

* அடுத்து ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

* இவை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கூடவே 10 மிளகு ஒரு சிட்டிகை பட்டை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* இதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம்.

இதை வாரத்துக்கு இரண்டு முறை குடித்து வர வேண்டும். உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் சில வாரங்களில் குறையாது. அவரவர் உடல் நிலையை பொறுத்து மாறுபடலாம். சில மாதங்கள் கூட ஆகலாம்.

எனவே வாரத்திற்கு இரண்டு முறை வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் தேங்குவதை தவிர்த்து ரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.