நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!!

0
126
#image_title

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!!

குன்மம் எனப்படுவது வயிற்றுப்புண் மற்றும் சிறுகுடலின் முற்பகுதியிலோ அல்லது உள்ளுக்குள் ஏற்படும் புண்னை குறிக்கிறது. ஒரு  வகையான பாக்டீரியாவினால் குன்மம் ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியா எல்லாருக்குமே இருக்கும்.

ஆனால் மது அருந்துதல், புகைப்பிடித்தல், சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருத்தல், சரியான தூக்கம் இல்லாமை, மன அழுத்தம் போன்றவை குன்மம் உண்டாக காரணங்களாகும். இந்த குன்மத்தால் வயிற்று வலி, உடல் எடை குறைதல், அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படக்கூடும். இதை சரி செய்ய கூடிய வழிமுறைகளை பார்க்கலாம். இதில் குறிப்பிட்ட பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

பருத்தி விதை    3.5 கிராம்

கல்லுப்பு         10.5 கிராம்

கறிவேப்பிலை   10.5 கிராம்

பெருங்காயம்    10.5 கிராம்

திரிகடுகு         35 கிராம்

சீரகம்           35 கிராம்

ஓமம்                 35 கிராம்

இலவங்கபபத்திரி 35 கிராம்

மேலே குறிப்பிட்ட பொருட்களை தனித்தனியே இடித்து, பொடி செய்து, சலித்து, பிறகு ஒன்றாக சேர்த்து கலந்து உபயோகிக்கவும். வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதனை குடித்து வர, வயிற்று வலி, மாந்த குன்மம், வயிற்றுப்போக்குடன் கூடிய அஜீரணம், பசியின்மை,ருசியின்மை  போன்ற நோய்கள் நீங்கும்.

author avatar
CineDesk