போராட்டமா பண்றீங்க? ரேஷன் கடை விற்பனையாளர்களின் அடிமடியில் கைவைத்த தமிழக அரசு!

0
81

தமிழ்நாட்டில் நியாய விலை கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இன்றைய சூழ்நிலையில், மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலை கடைகள் திறக்கப்படும் அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு கூட்டுறவு துறை உத்தரவிட்டு இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு, நியாயவிலை கடைகளுக்கு தனித்துறை பொட்டல முறை என்பது 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக நியாய விலை கடை பணியாளர்கள் சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பொதுவிநியோகத் திட்ட பணியாளர்களுக்கு பாதிப்பு மற்றும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை வைத்து நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போராட்டத்தில் ஈடுபடும் பணியாளரின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.