கையை பின்னாடி விட்றியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!

0
63
Do you feel your hand back? Look at what I did! Co-operative action of female lawyer!
Do you feel your hand back? Look at what I did! Co-operative action of female lawyer!

கையை பின்னாடி விடறியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!

பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து தான் உள்ளது. பேருந்து ரயில் நிலையம் கோவில் பள்ளி கல்லூரி என எந்த இடம் பார்த்தாலும் ஏதாவது ஓர் பாலியல் வன்கொடுமை புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல தற்பொழுது பேருந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வக்கீல் படித்துவரும் மஞ்சு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது தாயுடன் இரவு எட்டு மணி அளவில் பேருந்தில் பயணம் செய்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு செல்ல பேருந்து ஏறியுள்ளார். அவ்வாறு ஏறியபின் இவர் இருக்கைக்கு பின்பு நாற்பது வயது மதிக்கத்தக்க ஓர் நபர் அமர்ந்துள்ளார்.

பேருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே இந்த நாற்பது வயது தக்க நபர் தனது சில்மிஷ வேலைகளை ஆரம்பித்துவிட்டார். தனக்கு முன்னிருந்த இளம்பெண் வக்கீலை தீண்டி வந்துள்ளார். பொறுத்துப் பார்த்த இளம்பெண் தன் வைத்திருந்த குண்டூசியை கொண்டு அந்த நபரின் கையில் குத்தி உள்ளார். குத்தியது மட்டுமின்றி அவர் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். குண்டூசியால் குத்தியும் அந்த நபர் திருந்தவில்லை. பொறுமை இழந்த அந்த பெண் வக்கீல் அந்தப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் அந்த நபர் குறித்து கூறியுள்ளார். அதுமட்டுமின்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு அந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக விரைந்து வந்தனர். பிறகு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை கைது செய்தனர்.

மேலும் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டல் செய்த அந்த நபர் யார் என்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ராகவன் என்பதும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பிறகு அந்தப் பெண் வக்கீல் தனக்கு நடந்ததை சமூகவலைத்தளத்தில் குண்டூசியால் அவர் கையை குத்துவது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பெண் வக்கீல் செய்த இந்த பதிவிற்கு அனைவரும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்றும் அந்தப் பெண்ணைப் புகழ்ந்து வருகின்றனர்.

author avatar
Parthipan K