ஜூன் 30ஆம் தேதிக்கு இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்!

0
85

ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களை பெற முடியாது என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அக்காலத்தை நோக்க மாகக் கொண்ட ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு தற்போது கொண்டு வந்திருக்கிறது.

இதன் அம்சம் என்னவென்றால் நம்மிடம் இருக்கின்ற குடும்ப அட்டையை வைத்து எந்த நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்தத் திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய ஆதார் அட்டையை குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அமைப்பின் இணைய தளத்தில் நீங்கள் ஆதாரை குடும்ப அட்டையுடன் இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.