நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.

0
92

நம் வாழ்வில் கஷ்டங்கள் வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்கள்!.

 

தினமும் காகத்திற்கு சாதம் வைக்க கூடிய பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. சில பேருக்கு இருக்காது.ஆனால் உங்களுடைய கஷ்டம் தீர இந்த சாதத்தை தினமும் காக்கைக்கு இப்படி வையுங்கள். இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு தான். பச்சரிசி, கருப்பு உளுந்து.

 

ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1/2 கைப்பிடி கருப்பு உளுந்தை போட்டு கழுவி விட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, 2 சிட்டிகை உப்பு போட்டு, மூன்றில் இருந்து நான்கு விசில் வைத்தால் இந்த சாதம் தயாராகிவிடும். இந்த சாதத்தை அப்படியே காகத்திற்கு வைக்க வேண்டும்.

என்ன பண்றது என்று சலிச்சுகிட்டு பரிகாரம் செய்வது போல செய்யக்கூடாது. ஆத்மார்த்தமாக தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த சாதத்தை தயார் செய்து முடிந்தால் பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு இந்த சாதத்தைக் கொண்டு போய் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளிப் பக்கத்தில் எந்த இடத்தில் காகம் வருமோ அந்த இடத்தில் வைத்து விடுங்கள். காகம் வந்து சாப்பிட்டாலும் சரி சாப்பிடவில்லை என்றாலும் சரி. தினமும் இந்த பரிகாரத்தை மனநிறைவோடு செய்துவிட உங்களுடைய தீரா கஷ்டம் சீக்கிரத்தில் தீர்ந்து போகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

இந்த பரிகாரத்தை காலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். அதாவது காலை 10 மணிக்கு முன்பாக இதை செய்து விடுங்கள். பரிகாரத்தை செய்து விட்டீர்கள் மேலும் சாதத்தை காகத்திற்கு வைத்து விட்டீர்கள் ஆனால் காகம் தவிர அந்த சாதத்தை மற்ற உயிரினங்கள் வந்து சாப்பிட்டாலும் தவறு கிடையாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

 

பச்சரிசிக்கு பதில் புழுங்கல் அரிசியை பயன்படுத்த வேண்டாம். முடிந்தவரை பச்சரிசியை பயன்படுத்தியே இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். ஒரு சிலருடைய வீட்டில் காகத்திற்கு இந்த சாதத்தை வைப்பதற்கு வழியே இருக்காது. அப்பார்ட்மெண்டில் இருப்பார்கள் என்ன செய்வது.

 

வாரத்தில் ஒரு நாளாவது இந்த சாதத்தை செய்து அதை பசு மாட்டிற்கு கொடுத்து வரலாம். பசுமாடு இருக்கக்கூடிய இடத்திற்கு சென்று இந்த சாதத்தை பசுமாட்டிற்கு வைத்து விடுங்கள். இதுவும் நல்லதொரு பலனை கொடுக்கும். உங்களுக்கு மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இருந்தால், பின்பற்றி பலனடையலாம்.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here