ஒரே ரேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய கூடாது!! கூட்டுறவு துறை அதிரடி!!

0
80

ஒரே ரேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய கூடாது!! கூட்டுறவு துறை அதிரடி!!

ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு நபர்கள் யாராவது இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ரேஷன் கடையில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்று கூட்டுறவு துறை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக நியாய விலை கடைகளில் மோசடி நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக நியாய விலை கடைகளில் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து மீண்டும் பயோமெட்ரிக் மூலம் அடையாளம் சரிபார்த்த பிறகு ரேஷன் பொருட்களை தரும் பணி தொடங்கி விட்டது.

மேலும், அதனை போல தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இணைய வழியில் புகார் அளிப்பதில் சிரமம் உள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளதினை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதாவது ரேஷன் கடையில் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. மேலும் வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரித்து உள்ளது. மேலும் வெளியாட்களை அனுமதிக்க துணைபோகும் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ரேஷன் கடையில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்று கூட்டுறவு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஒரு பணியாளர் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிய அனுமதி இல்லை என்பது தெரிகிறது.

author avatar
Jayachithra