திருப்பதி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க கூடாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த காவல்துறை!!

0
155
#image_title

திருப்பதி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க கூடாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த காவல்துறை!

திருப்பதி கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் வாகனங்களில் பயணக்கும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி மலைப் பாதைகளில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மலைப் பாதைகளில் சமீப நாட்ளில் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பாதைகளில் பழைய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் விபத்துகள் நடைபெற்று வருகிறது. விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து உதவி போலிஸ் சூப்பிரண்டு முனிராமையா அவர்கள் “மலைப் பாதைகளில் வாகனம் ஓட்டுவது பற்றி வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் விபத்துககள் அதிகளவு நடக்கின்றது.  செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதாலும்,  மலைப் பாதைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றது.

மேலும் மலைப் பாதைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பி புகைப்படங்கள் எடுக்கின்றனர். இதனாலும் விபத்துகள் ஏற்படுகின்றது. மலைப்பாதைகளில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுப்பதை தடை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய உதவி போலிஸ் சூப்பிரண்டு முனிராமையா அவர்கள் “மலைப்பாதைப் பற்றி தெரிந்த ஓட்டுநர்கள் மட்டும்தான் வாகனங்களை ஓட்ட வேண்டும். மலைப் பாதைகளில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவுள்ளது. விதிகளை மீறுபவர்களின் வாகனங்களை தடை செய்வோம்” என்று கூறினார்.