அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி உடைகிறதா? அண்ணாமலையின் விமர்சனத்தால் பரபரப்பு!

0
80

மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தேர்தல் சமயத்தில் rs.2000 கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்று மிகக் கடுமையாக சாடி இருக்கின்றார் பாஜகவை சார்ந்த அந்த கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை.

பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கின்ற நிலையில், அவருடைய இந்த பேச்சு அதிமுக தொண்டர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

எதிர்வரும் மே, மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் சமயத்தில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற வியூகங்களிலும் தமிழக அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையிலே, கொரோனா தொற்று மற்றும் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்வரும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது.

அதோடு அந்த அறிவிப்பிற்கு அரசாணையும் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அரசுடைய இந்த அறிவிப்பானது எதிர்க்கட்சிகளை மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் rs.2500 என அறிவிக்கப்பட்டிருக்கும் அதிமுக அரசின் இந்த அறிவிப்பானது தேர்தலுக்கான பணப்பட்டுவாடா என்றும், மக்களுடைய வாக்குகளை பெறுவதற்காக அதிமுக அரசு திட்டமிட்டு சதி வேலைகளில் இறங்கி இருப்பதாகவும், அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையிலே, இதற்கு பதில் தெரிவித்திருக்கின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கொரோனா, மற்றும் புயல் வெள்ளம் என இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களுக்கு நிதி கொடுப்பது தவறா? ஏழை எளிய மக்களுக்கு சலுகை கொடுப்பதை தடுப்பவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது எனவும், தெரிவித்திருக்கின்றார் அதிமுகவை எதிர்க்கட்சிகள் இது குறித்து கடுமையாக விமர்சித்து அந்த நிலையிலே, அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழக பாஜக வும், தமிழக அரசின் இந்த அறிவிப்பை விமர்சனம் செய்து இருக்கின்றது.

வேளாண் சட்டங்களின் நன்மையை மக்களுக்கு விளக்கும் வகையில், அந்தக் கட்சியை சார்ந்த தமிழக தலைவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையிலே, பொள்ளாச்சி, மற்றும் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் வேளாண் சட்டங்களின் நன்மைகளை மக்களுக்கு விளக்கும் விதமாக நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் தேர்தல் சமயத்தில் மக்களிடம் 2000 ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்று மிகக் கடுமையாக சாடி இருக்கிறார்.

ஆனால் மோடி அரசியல் அவ்வாறு கிடையாது. கடந்த ஆறு வருடங்களாக ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை மோடி அரசியல் உயர்த்தி இருக்கின்றது. பெண்களை தலைநிமிர வைத்து இருக்கின்றது. விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. 2000 ரூபாய் தருகிறார்கள் என்ற காரணத்திற்காக வரும் ஐந்து வருடங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையை அவர்களிடம் அடமானம் வைத்து விடாதீர்கள் என்று அண்ணாமலை மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்ற நேரத்தில் “2000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்பதற்காக வாழ்க்கையை அடமானம் வைத்து விடாதீர்கள்” என்று அண்ணாமலை நேரிடையாக அதிமுக வை விமர்சனம் செய்திருப்பது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தி இருக்கின்றது.