இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை! 

0
151
#image_title

இந்த மாவட்டத்தில் ட்ரோன் பறக்க கூடாது? அதிரடி தடை விதித்த காவல்துறை! 

கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாளை ட்ரோன் பறக்க கூடாது என போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளனர். ஜனாதிபதி வருகையை ஒட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திரௌபதி முர்மூ கேரள மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குப் பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் நாளை 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறைக்கு செல்லும் அவர் அங்கு பார்வையிட்டதும் தனி படகுமூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கும் பின்னர் அங்கிருந்தபடியே திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட முடிவு செய்துள்ளார்.

அதையடுத்து விவேகானந்த கேந்திரா சென்று  அங்குள்ள பாரத மாதா கோயிலில் வழிபாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்ப இருக்கிறார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர சுற்றுலாப்பயணிகளுக்கு  அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க போலீசார் அதிரடியாக தடை உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.